பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களின் குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
சென்னையில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-6ல் பி.கெனால் சாலையில் உள்ள காளி கோயில் திறந்தவெளி இடம். மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம். தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-46ல் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், சி-கல்யாணபுரத்தில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி. இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-56 பவளக்கார தெருவில் உள்ள ஜெயின் விலாஸ்.
திரு. வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-73ல் பட்டாளம், ஸ்டாரஹன்ஸ் சாலையில் உள்ள மண்டலம் 6 அலுவலகம். அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-79ல் வெங்கடாபுரம், ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள அருள் ஜோதி திருமண மண்டபம். தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-125ல், மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி. கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-134ல் மேற்கு மாம்பலம், பக்தவச்சலம் தெருவில் உள்ள விளையாட்டு மைதானம். வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்–11) வார்டு-144ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள ஶ்ரீபாக்கியலட்சுமி திருமண மண்டபம். ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்–12) வார்டு-161ல் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ் நிதி மேல்நிலைப் பள்ளி
ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்–12) வார்டு-161ல் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ் நிதி மேல்நிலைப் பள்ளி. அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-172 கிண்டி, ரேஸ் கோர்ஸ் உட்புற சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தங்கும் விடுதி மைதானம். பெருங்குடி மண்டலம் (மண்டலம்–14) வார்டு-186ல் உள்ளகரம், புழுதிவாக்கம் பிரதான சாலையில் உள்ள ஶ்ரீ சுமங்கலி திருமண மண்டபம் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.