Vadivelu | வடிவேலு நாக்குல சனி இருக்கு..!! முதல்வரே சொல்லிட்டாரு..!! பிரச்சாரத்திற்கு வராதீங்க..!!

நடிகர் சிங்கமுத்து தேர்தல் பரப்புரை குறித்து பேசும்போது, வடிவேலு சென்ற இடமெல்லாம் தோல்வி என்று விமர்சித்தார்.

அதிமுக கட்சியின் ஆதரவாளராக இருந்து வரும் நடிகர் சிங்கமுத்து, தேர்தல் பரப்புரை குறித்து ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். திமுக கட்சியை சாடிய அவர், அதிமுக ஆட்சி நன்றாக இருந்ததாகவும், இரட்டை இலையை ஒன்றும் பண்ண முடியாது என்றும் கூறினார். பின்னர் நடிகர் வடிவேலு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவருக்கு அரசியலில் யோகம் இல்லை என்றார்.

மேலும், ‘நான் போன இடமெல்லாம் வெற்றி பெற்றது, வடிவேலு போன இடமெல்லாம் கால் வெச்சதும் தோற்று போச்சு. எல்லாமே தோல்வியால அவரே ராசி இல்லைன்னு முடிவு பண்ணி போறதில்ல. அதுமட்டுமில்ல, அவரு போன இடம் எதுவுமே ஜெயிச்சது இல்ல. அதனால் முதலமைச்சர் கூட வடிவேலுவ… நீங்க அமைதியா விசுவாசியா இருங்க, பிரச்சாரம் பண்ண வேணாம். நாக்குல சனி இருக்குன்னு கூட சொல்லி இருக்கலாம்’ என்றார்.

Read More : ’திமுகவை கரம் கோர்த்து அடிப்பாங்கன்னு நெனச்சா இவங்களே அடிச்சிக்கிறாங்க’..!! நடிகை கஸ்தூரி விமர்சனம்..!!

Chella

Next Post

’ஓட்டுக்கு வாக்காளர்கள் பணம் வாங்கினால் நடவடிக்கை’..!! சத்யபிரதா சாஹூ எச்சரிக்கை..!!

Fri Apr 5 , 2024
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அவர்கள் தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தல் முன்னேற்பாடுகள், மற்ற மாநிலங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே சி-விஜில் ஆப் […]

You May Like