2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் கூட்டணியில் இணையும் கட்சிகளின் நிலைபாடு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேமுதிகவை பொருத்தவரை இதுவரையில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் யாருடன் கூட்டணியில் இணைவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் பிரேமலதா முன்னதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சமீபத்தில் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு தவெக கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. விஜய் தரப்பும் தங்களது கூட்டணியை வலுப்படுத்த டிடிவி தினகரன் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு செல்ல டிடிவி தினகரனும் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக விஜய் தலைமையில் பலமான புதிய கூட்டணி அமையும் என்று டிடிவி தினகரன் பேசியது குறிப்பிடத்தக்கது.
Read more: கொட்டாவி விட்டதால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!. திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு!. ரயிலில் பரபரப்பு!



