உதயநிதிக்கு சட்டப்பேரவையிலே பதிலடி கொடுத்திருக்கனும்.. ஆனால் விஜய் தடுத்துவிட்டார்..! – ஆதவ் அர்ஜூனா

a1775

தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற வில்லிவாக்கம் தொகுதி மக்களை நேரில் சந்தித்து தவெக எம்.எல்.ஏ ஆதவ் அர்ஜூனா நன்றி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 65 சதவீதம் பேர் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியதை சுட்டிக்காட்டி, 2006 தேர்தலில் கலைஞர் கருணாநிதி வெறும் 26 சதவீத வாக்குகளைப் பெற்றும் முதல்வராக பொறுப்பேற்றதை நினைவூட்டினார்.


ஒரு தொகுதிக்கு 30 கோடி ரூபாய் வரை செலவு செய்தார்கள். ஆனால் எங்கள் தரப்பில் மிக குறைந்த செலவில், சாதாரண வேட்பாளர் ஒருவர் சிட்டிங் எம்.எல்.ஏவை தோற்கடித்துள்ளார். பணம் மற்றும் அதிகார பலத்தைக் காட்டிலும் மக்கள் ஆதரவே முக்கியம். நாங்கள் ரோட்டில் இருந்து வந்தவர்கள்; குடும்ப அரசியல் பின்னணியில் இருந்து வரவில்லை, அரசியல் போட்டியில் தனித்தன்மை மற்றும் மக்கள் ஆதரவு முக்கியம் என வலியுறுத்தினார்.

ஆட்சி அமைப்பு தொடர்பான விவாதத்தில், பெரும்பான்மை இல்லாத சூழலிலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் விஜய்யை முதல்வராகக்கூடாது என்பதற்காக திமுகவும் அதிமுகவும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஒரு தொழிலதிபர் ஆளுநர் மாளிகையில் இருந்தபடி உதவினார்.

அதனால்தான் அதிமுகவில் இருந்து சிவிசண்முகம் உள்ளிட்டோர் வெளியே வந்தனர். பதவி வெறி காரணமாக உதயநிதி ஸ்டாலின் விஜய் முதல்வராகுவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆளுநர் தடை போட்டபோது ராகுல் காந்தி தான் தவெக ஆட்சிக்கு கை கொடுத்தார்” என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டமன்றத்தில் பேசும்போது எழுந்து பேசலாம் என்று நினைத்தேன்; அண்ணன் (முதல்வர் விஜய்) வரும்போதே, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டும்தான், நாம் யாரும் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

Read more: தொப்பை குறைய உதவும் மூலிகை தேநீர்.. இஞ்சி – எலுமிச்சையின் நம்ப முடியாத அதிசய பலன்கள்..!

English Summary

I could have retaliated against Udhayanidhi in the Legislative Assembly.. but Vijay stopped me..! – Adhav Arjuna

Next Post

"உங்கள் மகளுடன் நீங்கள் உடலுறவு கொண்டால்.." மத போதகரின் சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனம்..!

Fri May 15 , 2026
‘If You Have Sex With Your Daughter….’: Pakistan Maulana’s Disgusting Remarks Spark Outrage
tariq masood

You May Like