நாளை வாக்குப்பதிவு..!! ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!!

நாடாளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு அளிப்பதற்காக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே படையெடுக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் இருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

Read More : ”வாக்களிக்க வரிசையில் நிற்போருக்கு டோக்கன்”..!! சத்யபிரதா சாஹூ சொன்ன முக்கிய தகவல்..!!

Chella

Next Post

"செர்லாக்கில் அடிக்டிவ் சுகர்" குற்றச்சாட்டு…! நெஸ்லே நிறுவனம் சொல்வதென்ன..!

Thu Apr 18 , 2024
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் செர்லாக்கில் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் நெஸ்லே நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. பப்ளிக் ஐ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவான செர்லாக்கில் இரட்டைத் தரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, பல நாடுகளில் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேனைச் சேர்ப்பதாகவும், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் […]

You May Like