உஷார்!… “Dairy milk சாக்லேட்” சாப்பிட தகுதியற்றவை!… உணவு ஆய்வகம் அதிர்ச்சி அறிக்கை!

Dairy milk சாக்லேட் சாப்பிடுவதற்கு தகுதியற்றவை என்று தெலுங்கானா உணவு ஆய்வகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டுகளை சமூக ஆர்வலர் ராபின் சாக்கியஸ் வாங்கியுள்ளார். அதில் புழு ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் புழு ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த சாக்லேட்டுகளை தெலுங்கானா மாநில உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அதில் வெள்ளைப் புழுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆதலால் இந்த சாக்லேட்டுகள் சாப்பிடுவதற்கு தகுதியில்லாதவை என்று உணவு ஆய்வகம் தெரிவித்துள்ளது. உணவு ஆய்வகத்தின் அறிக்கையை ராபின் சாக்கியஸ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தைகள் அடிக்கடி உண்ணும் பாதுகாப்பற்ற உணவை வழங்குவதற்காக எப்எம்சிஜி (FMCG) நிறுவனங்களை பொறுப்பேற்க வைத்து தண்டிக்க வேண்டிய தருணம் இது. இத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த X பதிவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவர் டேக் செய்துள்ளார். இந்த பதிவிற்கு கேட்பெரி (Cadbury) பிராண்டின் உரிமையாளரான மாண்டலெஸ் (Mondelez) பதில் அளித்துள்ளார். அதில், உலகின் மிக விரிவான உணவுப் பாதுகாப்பு அமைப்பை நாங்கள் பின்பற்றுகிறோம். மேலும், எங்கள் தயாரிப்புகள் உடல் ரீதியாக எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Readmore: Gas சிலிண்டர் விலை உயர்ந்தது!… எவ்வளவு தெரியுமா!

Kokila

Next Post

Seeman | தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல்..!! பொங்கி எழுந்த சீமான்..!!

Fri Mar 1 , 2024
தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரை திமுக அடியாட்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து செய்தி சேகரிக்க சென்னை நுங்கம்பாக்கம் காம்டா நகர் சென்ற பாலிமர் […]

You May Like