School Holiday | குட் நியூஸ்..!! இந்த மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெறவுள்ளதால், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (பிப்.20) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School Holiday | நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம், வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 20.02.2024 (செவ்வாய் கிழமை) நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார். வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் கடிதத்தில் கோரியுள்ளதன் அடிப்படையில் வேதாரண்யம் வருவாய் கோட்ட அலுவலரின் கடிதத்தில் மேற்படி நாளில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருள உள்ளார். இதைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் மட்டும் உள்ளுறை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Read More : https://1newsnation.com/vijay-tvk-party-the-target-is-to-add-2-crore-members-to-the-party-tamil-nadu-success-club-report/

Chella

Next Post

"தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது".. ஜே.பி நட்டாவை தடுத்த அமித்ஷா.! பாஜக மாநாட்டில் சலசலப்பு.!

Mon Feb 19 , 2024
தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த […]

You May Like