13 தலைவர்களை கழட்டிவிடும் திமுக!. யார் யார் தெரியுமா?. மு.க.ஸ்டாலினின் அதிரடி மூவ்!.

mk stalin 2

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு: திமுக கிளைச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45. ஒருவர் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். புதிய நிர்வாக அமைப்பாக மாநகரபகுதிகளில் கிளைப் பிரிவு தொடங்கப்பட்டு, கிளைச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படுகிறது.

45 வயதுக்கு மிகாதவர், அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரும் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்பு ஏற்படுத்தப்படும். பிறமாநகராட்சிகளில் நிர்வாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற அமைப்புகள் உருவாக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டங்கள், சராசரியாக 10 ஆயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்கும். மற்ற மாநகரங்களில் சராசரியாக 5 ஆயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்கும். வட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது 50. ஒருவர் அப்பொறுப்பை 2 முறை மட்டுமே வகிக்க முடியும். இதேபோல் பேரூராட்சி செயலாளரின் அதிகபட்ச வயது 60. இரண்டு முறை மட்டுமே ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் பகுதிகள் 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், மற்ற மாநகரங்களுக்குச் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்கள் கொண்டதாகவும் இருக்கும். பகுதிச் செயலாளரின் அதிகபட்ச வயது 60. ஒருவருக்கு 2 முறை மட்டுமே வாய்ப்புவழங்கப்படும். 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரம் உருவாக்கப்படும். நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60. அவர் 2 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.

மேலும், சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்படும். ஒன்றியச் செயலாளரின் அதிகபட்ச வயது 60. அவரும் 2 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். ஊராட்சி ஒன்றியத்தை அடிப்படை அலகாகக் கொண்டு ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்படும்.

எந்தச் சூழலிலும் ஒரு ஊராட்சி 2 ஆகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு ஒன்றியங்களுடன் இணைக்கப்படக் கூடாது. ஒவ்வொரு ஒன்றியமும் ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் அமைந்திருக்க வேண்டும். ஒரு ஒன்றியம் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள் இடம்பெறும் நிலை தொடரக் கூடாது.

தற்போது கட்சியின் மாவட்டங்கள் எண்ணிக்கை 77 ஆக உள்ளது. வருவாய் மாவட்டங்களை அடிப்படை அலகாகக் கொண்டு 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும். அவ்வாறு பிரித்த பிறகு, ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு தொகுதி

மட்டும் எஞ்சும் நிலை ஏற்பட்டால், அந்தத் தொகுதி அதே வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட பொருத்தமான கட்சி மாவட்டத்துடன் 3-வது தொகுதியாக இணைக்கப்பட வேண்டும். மாவட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது 70. மாவட்டச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.

இதனடிப்படையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள், 110-ஆக உயரும். கட்சி மாவட்டம் அதிகரிப்பதால் மாநகரச் செயலாளர்கள் என்ற பொறுப்பின் தேவை எழவில்லை. மாவட்டங்களில் இடம்பெறவுள்ள தொகுதிகளைக் திமுக தலைவர் மு.க ஸ்டாலினே முடிவெடுப்பார். அவர் அறிவித்தவுடன், செயற்குழுக் கூட்டம் கூட்டப்படும்.

அதில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை அமைப்புகள் 15 நாட்களுக்குள் உருவாக்கப்படும். பிறகு கட்சித் தலைமை அனுப்பும் பிரதிநிதியின் முன்னிலையில், மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டி, ஒப்புதலைப் பெற்று, இறுதிப் பட்டியலைக் கட்சியின் தலைமைக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுகவில் தற்போது 70 வயதை கடந்த 13 பேர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளனர். அதாவது, எ.வ.வேலு(75), அனிதா ராதாகிருஷ்ணன்(74), ரகுபதி(76), செஞ்சி மஸ்தான்(71), கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் (77), ஆர். காந்தி (80), சாக்கோட்டை அன்பழகன் (72), ஆவுடையப்பன் (81), முத்துசாமி (77), கோ.தளபதி (70), சுந்தர் (72), ராமகிருஷ்ணன் (77), எஸ்.ஆர். சிவலிங்கம்(75) ஆகியோர் முக்கிய புள்ளிகள் லிஸ்ட்டில் உள்ளனர்.

1newsnationuser5

Next Post

மருத்துவமனையில் வார்மர் இயந்திரம் தீப்பிடித்து விபத்து!. பச்சிளம் குழந்தை உயிரிழந்த சோகம்!. 2 குழந்தைகள் கவலைக்கிடம்!

Sun Aug 23 , 2026
மத்தியப் பிரதேசம் சிந்தவாரா மாவட்ட மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வார்மர் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு குழந்தைகள் தீக்காயமடைந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் வார்மர் (குழந்தைகளுக்கான வெப்பமூட்டும் கருவி) இயந்திரத்தின் பிலமென்ட்டில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக இந்த விபத்து நேரிட்டது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். […]
Newborn Dies

You May Like