உள்ளாட்சித் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும்! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

k annamalai jpg 1

உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு நேரடியாகப் போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சோழபாண்டியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் 15,000 மரக்கன்றுகள் நடும் சுற்றுச்சூழல் பணி நடைபெற்றது. டாக்டர் எம்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அண்ணாமலை, ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டமைப்பதன் மூலமே ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த காலங்களில் இதே மன்னார்குடியிலும் தாராபுரத்திலும் தொகுதி வாரியாக வீதி வீதியாகச் சென்று, காலில் விழுந்து வாக்கு சேகரித்து சிலரை சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற வைத்தோம். ஆனால், வெற்றி பெற்ற பிறகு அவர்கள் அந்தக் கட்சியிலேயே நீடிக்கவில்லை. சுயநலமும் சந்தர்ப்பவாதமும் நிறைந்த இத்தகைய மோசமான அரசியல் கலாசாரத்தை அடியோடு உடைத்தெறிய வேண்டும்; இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று விமர்சித்தார்.

மேலும், அடித்தட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, நீர்நிலைகளைத் தூர்வாருவது மற்றும் மரங்களை நட்டுப் பாதுகாப்பது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுப்பவர்களே உண்மையான தலைவர்களாக உருவாக வேண்டும் என்றார். “மக்கள் எதிர்பார்ப்பது போன்றதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 234 தொகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளில் புதிய தலைவர்கள் உருவாக்கப்படுவர். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு முழுவீச்சில் போட்டியிடும்” என அவர் தெரிவித்தார்.

Read More : வங்கக்கடலில் திடீர் திருப்பம்! அடுத்த 48 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்! தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

Next Post

காய்ச்சல் தடுப்பூசி போட்டால் ஞாபக மறதி குறையுமா?. விவாதத்தை ஏற்படுத்திய ஆய்வு!

Tue Oct 13 , 2026
வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசி உங்களைப் பருவகால காய்ச்சலில் இருந்து பாதுகாப்பதுடன், அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்களின் அபாயத்தை 40 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என்ற ஆய்வறிக்கைகள் தற்போது மருத்துவ உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு ‘ஜர்னல் ஆஃப் அல்சைமர்ஸ் டிசீஸ்’ இதழில் வெளியான ஆய்வின்படி, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் குறைந்தது ஒரு முறையாவது காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டால், தடுப்பூசி […]
AA1Fujsd

You May Like