திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும்…! திருமாவளவன் பரபரப்பு கருத்து

thirumavalavan 2025

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.

பெரம்பலூரில் மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்; கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் கேட்பது இயல்பு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளது போல, நாங்களும் இந்த முறை திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்போம். ஆனால், பேச்சுவார்த்தை அடிப்படையில் இறுதி முடிவை எடுப்போம்.


தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் எனும் அமித்ஷாவின் எண்ணம் இன்னும் கைகூடவில்லை. ஏற்கெனவே அவர்கள் கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக கட்சிகள்கூட கூட்டணியில் இணைய தயக்கம் காட்டி வருகின்றன. தவெக-வை கூட்டணியில் இணைக்க போராடி வருகின்றனர்.

கூட்டணியை உருவாக்கவே இவ்வளவு பாடுபட வேண்டிய சூழ்நிலையில், ஆட்சியைக் கைப்பற்றுவோம் எனக் கூறுவது நகைப்புக்குரியது. ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தினாலும்கூட தமிழகத்தில் ஒரு இடத்திலும் அவர்களால் வெற்றிபெற முடியாது. எத்தனை ஆன்மிக மாநாடுகளை நடத்தினாலும், தமிழகத்தில் அவர்கள் வெற்றிபெற முடியாது.

Vignesh

Next Post

தீவிரமடைந்த லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்!. ஆப்பிள் ஷோரூமை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்!. ஐபோன்களை கொள்ளையடித்து சென்ற பயங்கரம்!

Wed Jun 11 , 2025
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் குடியுரிமை சட்டங்களை கடுமையாக்கியுள்ளார். இதனால் சட்ட விரோதமாக குடியேறிய மக்களை நாடு கடுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டு தங்கள் நாட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். இது தொடர்பாக, ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு குடியுரிமை இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் […]
Los Angeles riots 11zon

You May Like