இது எவ்வளவு பெரிய கேவலம்..? முதல்வருக்கு இப்பயாவது புரியுதா..? விளாசிய இபிஎஸ்..

Stalin EPS 2025

விளாத்திக்குளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்..


இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது அதிமுக. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!

இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம் திரு ஸ்டாலின் அவர்களே? காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?

இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.

தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்!விரைவில் அமையப்போகும் அதிமுக அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ”ரஜினி எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டார்.. ஆதவ் கூறியது பொய்.. ” திருமாவளவன் காட்டம்..!

RUPA

Next Post

நயன்தாரா, த்ரிஷா, சமந்தா.. தென்னிந்திய ஹீரோயின்கள் ஒரு படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்குகின்றனர்..? ஷாக் ஆகாம படிங்க.!

Fri Mar 13 , 2026
கடந்த சில ஆண்டுகளில் தென்னிந்தியத் திரையுலகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள், அகில இந்திய அளவில் வெளியாகும் படங்கள் மற்றும் வலுவான கதைக்களங்கள் ஆகியவற்றின் காரணமாக, தென்னிந்தியப் படங்கள் நாட்டின் எல்லைகளுக்குள்ளேயன்றி, வெளிநாடுகளிலும் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றன. இதன் விளைவாக, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகங்களில் பல தென்னிந்திய நடிகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனாலேயே அவர்கள் தங்கள் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளனர். 2025–2026 ஆம் ஆண்டிற்கான […]
south actress salary 1

You May Like