இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தபோது உதயநிதி என்ன பேசினார்?. போதைப்பொருளுக்கு எதிராக அப்போதைய துணை முதல்வராக இருந்த உதயநிதி என்ன செய்தார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், கோவையில் மாணவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகே மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததாகவும், இதன் விளைவாகவே பாலியல் அத்துமீறல்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் கணிசமாக உயர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாகத்தால் திமுகவை மக்கள் தூக்கி எரிந்துள்ளனர். தவெக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர் கொலை வழக்கில் காவல்துறையின் அறிக்கையா? அல்லது இறந்தவர்களின் தாயா? என்றால், எங்கள் முதல்வர் அந்த தாயின் பக்கம் தான் இருப்பார். எந்த அழுத்தத்திற்கும் இடம் தரமாட்டோம்.” என்றார். மேலும், போதைப்பொருளுக்கு எதிராக அப்போதைய துணை முதல்வராக இருந்த உதயநிதி என்ன செய்தார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் போதைப்பொருட்களால் எவ்வளவு கொலைகள் நடந்துள்ளன என்பதை கூறினோம். நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், உங்கள் ஆட்சியில் இது நடந்தது, அது நடந்தது எனக் கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. த.வெ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?.
போதைப்பொருளுக்கு எதிராக தி.மு.க. எடுத்த நடவடிக்கை, விழிப்புணர்வு செய்த டேட்டா அவரிடம் இருக்கிறது. தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமல்ராஜை எதற்காக ஆணையர் பதவியில் அமர்த்தியுள்ளீர்கள்? போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களக்கு முதல்வர் விருது வழங்கினார். கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்ட 15 பேருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார். போதைப்பொருள் ஒழிப்புக்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏன் விருது வழங்கினீர்கள்? என்றார்.



