சார்லஸ் மார்டினின் தாயார் லீமா ரோஸ், அதிமுக சார்பில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதால லால்குடியில் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, லீமா ரோசின் குடும்ப சொத்து குறித்து விமர்சித்தார். இந்நிலையில், ஜோஸ் சார்லஸ் மார்டின், செய்தியாளர்களை சந்தித்து தங்கள் குடும்பத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.
அவர் பேசுகையில், ” எங்கள் குடும்ப சொத்து விவரத்தை வெளிப்படைத்தன்மையுடன் சொல்லி இருக்கிறோம். எங்கள் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.24,000 கோடி வருமானம் வருகிறது. ரூ.7,000 கோடி வரி செலுத்துகிறோம். ஆனால், முதல்வர் தனது சொத்து மதிப்பு வெறும் 3 கோடி ரூபாய் என்றும், தன்னிடம் சொகுசு கார் இல்லை என்றும் கூறுகிறார். இதை யாராவது நம்புவார்களா? என்றார்.
லால்குடி தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் தன் தாய் லீமா ரோஸ் வெற்றி பெற்றால் லாட்டரி விற்பனை தொடங்கிவிடும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டிய சார்லஸ் மார்ட்டின், “லாட்டரி விற்பனையை எதிர்க்கும் தி.மு.க. அரசு, 2014ஆம் ஆண்டு எங்களிடம் 500 கோடி ரூபாய் நன்கொடை பெற்றது. இதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அந்த பணத்தை ஏன் பெற்றார்கள்? எதற்கு செலவழித்தார்கள்? முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் பதில் சொல்ல வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
நாங்கள் சொந்தப் பணத்தில் தொழில்களை செய்து வருகிறோம். ஆனால், திமுகதான் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. டாஸ்மாக் முறைகேடு, கனிம வளம், சுரங்க ஊழல் என அனைத்திலும் திமுகவினருக்கு தொடர்பு உள்ளது என கடுமையாக பேசினார். தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ள இந்த நேரத்தில், 500 கோடி ரூபாய் நன்கொடை விவகாரம் இரு தரப்புக்கும் இடையே புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
Read more: பெருங்கடலில் தங்க பொக்கிஷம்..! வியந்து போன விஞ்ஞானிகள்.. அசத்தல் கண்டுபிடிப்பு..!



