மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், பாலிவுட் சஸ்பென்ஸ் திரைப்படங்களை மிஞ்சும் வன்முறை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காதலனின் உதவியுடன், ஒரு பெண் தனது கணவரை கொன்று, அவரது உடலை வீட்டிற்குள் புதைத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சவான் (வயது 35) என்ற நபர், தனது மனைவி கோமல் சவானுடன் மும்பையிலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள நாலசோபரா கிழக்குப் பகுதியில் வசித்து வந்தார். மனைவி கோமல் சவானுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் மோனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
கணவருக்கு இந்த விஷயம் தெரியவரவே பல முறை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக விஜய் சவானை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது சகோதரர்கள் வீட்டிற்கு சென்றனர். அங்கு தரை, சுவர்கள் வேறு நிறத்தில் இருந்தனர். வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம் சகோதரகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்கு வந்து சோதனை செய்த போலீசார் சுவரை அகற்றினர். அப்போது சுவரில் விஜய் சவானியின் சடலம் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் விஜய் சவானின் மனைவி கோமல் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார். சடலத்தை வீட்டு சுவரிலே புதைத்து வைத்து இருவரும் தப்பித்து சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.
Read more: ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு.. தன்கர் உடல் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து..