தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வருமா..? இன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை..! ஸ்டாலினின் பிளான் என்ன..?

mk stalin selvaperunthagai

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..


ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.. அதிமுக பாஜக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக, டிடிவி தினகரன் இணைந்துள்ளனர்.. நாம் தமிழர் எப்போதும் போல தனியாக களமிறங்குகிறது.. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்தும் எந்த கட்சியும் இதுவரை தவெக கூட்டணியில் இணையவில்லை..

திமுக கூட்டணியில் புதிதாக தேமுதிக இணைந்துள்ளது. எனினும் திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும் காங்கிரஸ் கூறி வருகிறது.. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது..

எனினும் தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் ஒத்துவராது என்பதை ஸ்டாலின் வெளிப்படையாக கூறிவிட்டார்.. ஆனாலும் திமுகவை சீண்டும் வகையில் மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. சமீபத்தில் காங்கிரஸின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் தவெக காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாகவும், தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்..

எனினும் திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவே உள்ளது என்றும் கூட்டணி குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவித்தால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தை உள்ளிட்டோர் இறுதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்..

இந்த தேர்தலில் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று திமுக தலைமை கூறிவிட்டதாம்.. மேலும் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதை போலவே 25 அல்லது 27 தொகுதிகள் ஒதுக்க முடியும் எனவும், 1 மாநிலங்களவை சீட் கொடுக்க முடியும் என்று திமுக கூறிவருகிறதாம். இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்..

திமுக கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் தொடருமா அல்லது அதிக தொகுதிகளை கொடுக்கும் தவெக உடன் செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Read More : திமுகவில் இணைந்த OPS-க்கு என்ன பதவி தெரியுமா..? துணைப் பொதுச்செயலாளர் + சபாநாயகர்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

RUPA

Next Post

இறந்தவர்களின் பெயரில் அர்ச்சனை..!! ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் சிவபெருமான்..!! தமிழ்நாட்டில் இப்படி ஒரு அதிசய கோயில்களா..?

Sat Feb 28 , 2026
கோயில்களில் உயிருடன் இருப்பவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்கள் மோட்ச கதி அடையவும் இறந்தவர்களின் பெயரிலேயே அர்ச்சனை செய்யப்படும் விநோத கோவில்கள் இந்தியாவில் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய அபூர்வமான ஆன்மீக மரபுகளைக் கொண்ட பெரும்பாலான கோவில்கள் நம் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணசாமி கோவிலில் ஒரு விநோதமான ஐதீகம் பின்பற்றப்படுகிறது. பொதுவாக […]
Temple 2026 1

You May Like