சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிளவு தற்போது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒருபுறம் செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான மற்றொரு அணி தனியாக இயங்கி வந்தது.
கட்சி மேலாண்மை, பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சண்முகம்–வேலுமணி அணி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக நிலைப்பாடு எடுத்து வந்தனர். இந்த விவகாரம் அதிமுக உள்கட்டமைப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், அண்மையில் நடந்த சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சண்முகம் மற்றும் வேலுமணி அணி ஆளும் தரப்புக்கு ஆதரவாக வாக்களித்ததால் கட்சிக்குள் மோதல் வெடித்தது. அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் அந்த முடிவை எடுத்ததாக எடப்பாடி தரப்பு குற்றம் சாட்டியது. ஆனால் எதிர்பார்த்தபடி அமைச்சரவை இடங்கள் கிடைக்காததால், அந்த அணி கடும் அதிர்ச்சியில் இருந்தது.
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 3 அதிமுக MLAக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மதுராந்தகம் தொகுதி MLA மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி MLA சத்யபாமா, பெருந்துறை MLA ஜெயக்குமார் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் JCD பிரபாகரனிடம் வழங்கியுள்ளனர்.
இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 44 ஆக குறைந்தது. ராஜினாம செய்த கையோடு 3 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் தவெகவில் இணைந்தனர். இதில் மரகதம் குமரவேல் விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
Read more: வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்..! பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைய வாய்ப்பு..! காரணம் என்ன..?



