Election 2024: 81 லட்சம் பேர் 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்..!

ஒரு முன்னோடி முயற்சியாக, இந்திய தேர்தல் ஆணையம், முதல் முறையாக, 2024 மக்களவைத் தேர்தலில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரிவுகளில் உள்ள வாக்காளர்கள் ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த முன்முயற்சி தேர்தல் செயல்முறையில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை உறுதி செய்வதிலும், ஜனநாயக பங்கேற்பை அதிகரிப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சுமார் 81 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் சுமார் 90 லட்சம் பேரும் உள்ளனர்.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு இந்த நடைமுறை ஏற்கெனவே தொடங்கி விட்டது. வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் ஒத்துழைப்புடம் வீட்டிலிருந்து வாக்களிக்கும் நடைமுறை நடைபெறுகிறது. வாக்குப்பதிவில் ரகசியம் பராமரிக்கப்படுகிறது.

இந்த வசதியைப் பெறுவதற்கான செயல்முறை எளிமையானது. இதில் தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் தகுதியான வாக்காளர்கள் படிவம் 12டி-யைப் பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களுடன் மாற்றுத்திறனாளி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 85 வயதுக்கும் மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்கும் புகைப்படங்கள் https://elections24.eci.gov.in/ என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

Vignesh

Next Post

ADR Report: 1,618 வேட்பாளர்களில், 252 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது...! வெளியான அதிர்ச்சி தகவல்...!

Sat Apr 13 , 2024
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களும், அதிமுக வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல் கட்ட பொதுத் தேர்தலில் களமிறங்கியவர்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பணக்கார வேட்பாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தத்தில், 102 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள 102 தொகுதிகளில் 42 தொகுதிகளில் மூன்று அல்லது […]

You May Like