fbpx

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, அடித்துக் கொன்று ரோட்டில் வீசிய மனைவி..!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம் (45). இவருக்கு கடந்த வருடம் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை கிடைத்தது. இதனால் மதுரை அரசரடியில் முத்துராமலிங்கம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நரிக்குடி, திருச்சுழி ரோட்டில் காரேந்தல் பஸ் ஸ்டாப் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில், முத்துராமலிங்கம் இறந்து கிடப்பதாக அங்குள்ள மக்கள் திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவரது பெரியப்பா மகன் முருகன் என்பவர் முத்துராமலிங்கத்தின் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல் துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முத்துராமலிங்கத்தை யாராவது கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இதையடுத்து முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதாவிடம்(43) விசாரணை நடத்தினர். விசாரணையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவல், கேரளாவை சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி சுனிதா என்பதும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தனது குழந்தை அன்னபூரணியுடன் இங்கு வந்து முத்துராமலிங்கத்தை திருமணம் செய்து கொண்டார். புளியங்குளம் அருகே உள்ள அணிகலக்கியேந்தல் கிராமத்தில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். மின்வாரியத்தில் வேலை கிடைப்பதற்கு முன்பு முத்துராமலிங்கம் ஓர்க்‌ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்த பள்ளிமடத்தை சேர்ந்த மலையரசன்(25) என்பவருடன் சுனிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் பிறகு கள்ளக்காதலாக மாறியது. இது தெரிந்த முத்துராமலிங்கம் சுனிதாவை கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சுனிதா, மலையரசனிடம் தனது கணவரை கொலை செய்து விட்டு பிறகு அவரது உடலை சாலையில் வீசிவிடலாம், பிறகு விபத்து நடந்தது போன்று நாடகமாடி விடுவோம் என ஐடியா கொடுத்துள்ளார். இதன்படி மலையரசன் மற்றும் அவரது நண்பர் எம்.புளியங்குளத்தை சேர்ந்த சிவா(23) என்பவருடன் சேர்ந்து, முத்துராமலிங்கத்தை கட்டையால் அடித்து கொலை செய்தனர். பின்னர் முத்துராமலிங்கத்தின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து காரேந்தல் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டில் போட்டு விட்டு முத்துராமலிங்கம் விபத்தில் இறந்ததை போன்று நாடகமாடி உள்ளனர், என்பது விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் சுனிதா, மலையரசன், சிவா ஆகிய 3 பேரையும் திருச்சுழி காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு..! காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mon Jul 4 , 2022
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் கொரோனா ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தந்தை, மகனை காவல் நிலையத்தில் […]
தலைமை மருத்துவரை வீடியோ காலில் தொடர்புகொண்ட நீதிபதி..! மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி..!

You May Like