கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூலை 7 -ம் தேதி வரையில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது. மேலும் நேற்று வரை 3,43,586 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 2,82,430 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 2,50,181 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் டிடியாக அளிக்கலாம். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்” என அவர் கூறியுள்ளார்.