முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திடீரென மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டதால் என்ன காரணம் என்று தெரியாமல் தொண்டர்கள் முதல்வருக்கு என்ன ஆச்சு என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். தற்பொழுது அதற்கான பதிலை மருத்துவமனையில் கூறியுள்ளது. முதல்வர் சிகிச்சை பெற்ற சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
அதில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது வழக்கமான முதுகுவலி பரிசோதனை மேற்கொள்வதற்காக போரூரில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். தற்போது பரிசோதனை முடிவடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.