மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா என்ற பகுதியில் வசித்த பெண் ஒருவர், தன்னுடைய 20 நாட்களேயான பிறந்த குழந்தையை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி மருத்துவர்கள் அந்த தாயிடம் கூறியுள்ளனர்.
ஆனால், அதற்கு முன்பே குழந்தை இறந்ததாக தெரிய வந்துள்ளது. அத்துடன் குழந்தையை உடற்கூறாய்வு செய்துள்ளனர். அப்போது, தான் மனதை உருக்கும் செய்தி தெரிய வந்தது. பெற்ற தாயே தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, தாயை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் பற்றிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.