திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் பாபு என்கிற சுரேஷ் வசித்து வந்துள்ளார். நெல் வியாபாரியான இவருக்கு 17 வயதில் ஒரு பெண் அறிமுகமாக் பழக்கமாகியுள்ளார்.
அந்தப் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கி இருக்கிறார் பாபு. மாணவி பாபுவுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த தாய் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் அவமானத்தில் அந்த மாணவி நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயக்கம் அடைந்தார்.
உடனடியாக மாணவி மீட்கப்பட்டு சிகிச்சைக்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை கைது செய்ய தேடி வருகின்றனர்.
அவர் தலைமறைவாக இருந்த நிலையில் தூத்துக்குடி பகுதியில் ஒரு லாட்ஜில் தூக்கு போட்டவாறு பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.