மதுரையில் உள்ள கரிமேடு பகுதியில் தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோச்சடை பகுதியில் மல்லிகை தெருவை சார்ந்தவர் ஷேர் மார்க்கெட் நிறுவனம் நடத்தி வரும் உமாசங்கர் (46) இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே தனது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடன் வாக்குவாதம் செய்துவிட்டு தனது தாயார் விஜயலட்சுமியுடன்(73) கடந்த சில நாட்களாக வசித்து வந்திருக்கிறார் உமா சங்கர. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் இவரது நண்பர்களும் செல்போன் மூலம் இவரை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கின்றனர். ஆனால் இவர் எந்த அழைப்புகளையும் ஏற்கவில்லை. மேலும் சிறிது நேரத்தில் அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகி உள்ளது.
இதனால் பதற்றமடைந்த நண்பர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவரது வீட்டிற்கு சென்ற காவல்துறை நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாய் மகன் இருவரும் இறந்த நிலையில் சடலமாக கடந்துள்ளனர். தாங்கள் இறந்தது யாருக்கும் உடனடியாக தெரியக்கூடாது என்பதற்காக ஏசியை முழுவதுமாக ஓட விட்டபடி தற்கொலை செய்திருக்கின்றனர். இதனையடுத்து தடையவியல் நிபுணர்களை அழைத்து காவல்துறையின் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்கள் தற்கொலை செய்தது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு இருக்கலாம் என தடையவியல் சோதனையில் தெரிய வந்திருக்கிறது. பிறகு உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் தற்கொலை ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் நடந்ததா? அல்லது வேறேதும் காரணங்கள் இருக்கிறதா? என விசாரித்து வருகிறது காவல்துறை.