தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆனால் தற்போதைய ஆளும் தரப்பாக இருக்கக்கூடிய திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட இந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடவில்லை என்று பொதுமக்கள் சொல்கிறார்கள்.
அந்த வகையில். சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியில் சேர்ந்த ரவுடி ஆனந்த் (44) இதற்கு திருமணம் ஆகி சத்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றன இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உறவினர்களின் வீட்டிற்கு ஆனந்த் இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தார்.
அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று காரில் வந்து அவரை இடைமறித்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்க முயற்சித்தது.
அதிர்ச்சி அடைந்த ஆனந்த் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போதும் அவரை சுற்றி வளைத்த அந்த கும்பல் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆனந்த் உடலை கைப்பற்றி வேறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை கும்பலை பிடிப்பதற்கு காவல்துறை தரப்பில் தனி படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.