fbpx

வேலை பார்ப்பதற்காக வந்த 3 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு….! புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

முன்பெல்லாம் ஆண்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பதும், பெண்கள் ஆண்களுக்கு பாலியல் தொந்தரவுகளை வழங்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது சில ஆண்களே ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு வழங்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

அதாவது 3 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் ஒருவருக்கு 20 வருட கால சிறை தண்டனை விதித்து புதுவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.புதுவை மாநிலம் மங்கலம் அருகே உள்ள கீழ் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (60) இவர் கோரக்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்துப் பண்ணை ஒன்றை நடத்தி வந்தார்.

இந்த வாத்து பண்ணையில் அவருடைய மனைவி சுபா( 45) மகன்கள் ராஜ்குமார்( 27) சரத்குமார் (25) கன்னியப்பனின் மாமனார் காத்தவராயன் (70) மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாம்பலப்பட்டு பகுதியைச் சார்ந்த பசுபதி( 21) பெரிய முதலியார் சாவடி சிவா (21)வானூர் மூர்த்தி (21) கண்டமங்கலம் ஆறுமுகம்( 58) மில்லியனுர் வேலு (24) உள்ளிட்டோர் வேலை பார்த்து வந்தனர்.

ஆத்துக்களை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்று பராமரிக்கும் வேலைக்கு சில சிறுமிகளையும் வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அவர்கள் வாத்து பண்ணையிலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பண்ணையில் வேலை பார்த்த ஐந்து சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்தது குறித்து கடந்த 2020 ஆம் வருடம் மங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி புதுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது அந்த தீர்ப்பில், கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார் ,பசுபதி சிவா மூர்த்தி உள்ளிட்ட 6 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

காத்தவராயன், சுபா உள்ளிட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ஆறுமுகத்திற்கு 10 வருட கால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வேலு என்பவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு நடுவே அதே வாத்து பண்ணையில் வேலை பார்த்த மூன்று சிறுவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் நல குழுவினர் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியபோது அது உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு 3 சிறுவர்களும் அங்கிருந்து மீட்க்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக மங்களம் காவல்துறையினர் 3 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியாக வழக்கு பதிவு செய்தனர்.அதாவது, வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், வேலு, மூர்த்தி, பசுபதி உள்ளிட்ட 6 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பசுபதி மீதான பாலியல் குற்றம் நிரூபிக்க பட்டதால் அவருக்கு 20 வருட கால சிறை தண்டனையும் 14,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கும் தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கன்னியப்பன் உட்பட 5 பேர் மீதும் குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தார். இந்த இடத்தில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார்.

சிறுவர்களிடம் ஹோமோ செக்ஸில் ஈடுபட்ட வழக்கில் 20 வருட கால சிறை தண்டனை பெற்ற பசுபதி ஏற்கனவே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

2000 முதல் 2022 வரை... உலகில் பேரழிவை ஏற்படுத்திய மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா..?

Tue Feb 7 , 2023
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4300 ஆக உயர்ந்துள்ளது.. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. நேற்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மாலையில் 7.6, 6.0 என்ற அளவில் […]

You May Like