திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சார்ந்தவர் கஸ்தூரி. இவரது மனைவியின் பெயர் தமிழரசி இவருக்கு வயது 57. கஸ்தூரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து தனது தாய் வீட்டில் தமிழரசி வசித்து வந்திருக்கிறார். கணவர் உயிரிழந்ததன் காரணமாக இவர் மது புழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் தாய் வீட்டில் இருந்த தமிழரசி அதிகமான மது புழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார். இதனால் அவருக்கும் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
மதுவிற்கு அடிமையான தமிழரசியால் அந்தப் பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனை அவரது தாயார் வன்மையாக கண்டித்து வந்த நிலையில் இவர் தினமும் குடித்துக் கொண்டே இருந்திருக்கிறார். மது குடிப்பது மட்டுமல்லாமல் அடிக்கடி குடும்பத்தினருடன் சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு இருக்கிறார் தமிழரசி. தினமும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தினர் தொடர்ந்து கண்டித்து வந்திருக்கின்றனர். இதன் காரணமாக மனம் உடைந்த தமிழரசி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார் கஸ்தூரி. இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் தீவிரவாக விசாரித்தது காவல்துறை. மதுவிற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் 57 வயது பெண்மணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.