கடலூர் அருகே திருமணமான ஆறு மாதத்தில் சிங்கப்பூர் சென்று வந்த புது மாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் அருகே உள்ள அரியநாச்சியை சார்ந்தவர் ரமேஷ் வயது 29. இவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த ரமேஷுக்கு பவித்ரா(23) என்பவரை அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் சிங்கப்பூர் திரும்பி இருக்கிறார் ரமேஷ். இந்நிலையில் அவரது மனைவி இராமகோபாலன் என்பவர் உடன் சென்னை சென்றதாக தெரிகிறது.
இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். இது தொடர்பாக அவரது மனைவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வேலை தேடுவதற்காக தனது தோழிகளுடன் சென்னை சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் கடை தெருவில் ராமகோபாலுடன் மனைவி பவித்ரா பேசியிருப்பதை பார்த்திருக்கிறார் ரமேஷ். இதனைக் கண்டு கோபமடைந்த அவர் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு மனைவியை கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று ரமேஷ் அங்குள்ள மரம் ஒன்றில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் மனைவியின் மீது இருந்த சந்தேகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.