தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு விரைவில் ஓய்வு! தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதம் முதல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் இவர் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து திறமையுடன் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் தமிழகத்தில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வந்திருக்கிறார்.

பதவியேற்ற கால முதல் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை சிறப்பு கவனம் எடுத்து அடக்கி வந்த சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் இதற்காக பல ஆபரேஷன்களையும் நடத்தி இருக்கிறார். வங்கிகளில் ஏடிஎம் மோசடிகளை தவிர்ப்பதற்கு சிறப்பு கேமரா மற்றும் இணையதளம் தொடர்பான மேட்ரிமோனி மோசடி மற்றும் சைபர் கிரைம் மோசடி ஆகியவற்றிற்கு எதிராக சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். சைபர் கிரைம் தொடர்பாக இவர் அறிவித்து வரும் வீடியோக்களும் விழிப்புணர்வுகளும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் வருகிற ஜூன் மாதத்துடன் பதவிக்கால முடிவடைவதால் அதற்கு ஒரு மாதங்களுக்கு முன்பாகவே இவருக்கு பதில் அந்த பதவியை வருவதற்கான நபரை தமிழக அரசு தேர்ந்தெடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் அதன் அடிப்படையில் மூன்று பேரில் இருந்து ஒருவரை மத்திய உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்யும். சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பதவி காலத்திற்குப் பின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வருவதற்கான வாய்ப்பு சங்கர் ஜீவால ஐபிஎஸ் மற்றும் ஏ.கே விஸ்வநாத் ஐபிஎஸ் ஆகியோருக்கு இருப்பதாக கணிக்கப்படுகிறது.

Baskar

Next Post

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி கொடைக்கானல் நீதிமன்றம் அபாரம்!

Tue Feb 14 , 2023
கொடைக்கானல் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக பாலியல் வழக்கு ஒன்றுக்கு 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது கொடைக்கானல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் கொடைக்கானலில் விடுதி ஒன்று நடத்தி வருகிறார் இவர் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி கொடைக்கானல் சென்று இருக்கிறார். பின்னர் தனது காரில் விடுதி நோக்கி வந்து கொண்டிருந்தபோது மன்னவனூரை சார்ந்த ஜீவா […]

You May Like