திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறும்பபட்டியைச் சேர்ந்தவர் கோபால் இவருடைய மகன் வடிவேல்(29).இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பனியில் பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பதால் விடுமுறை முன்னிட்டு அவருடைய வீட்டிற்கு வந்து 2 நாட்களாக பழனியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று காலை பழனி பேருந்து நிலையம் முன்பு அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது சில மர்ம நபர்கள் அவரை வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த வடிவேலுவை மீட்டு பொதுமக்கள் அவசர உறுதியின் மூலமாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பழனி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேலும் இது குறித்து பழனி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், வடிவேலு மீது ஏற்கனவே பழனி அரசு மருத்துவமனையில் புகுந்து ஒருவரை வெட்டிய வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், பழனியில் முன் விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவரை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.