பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை…!

school holiday 2025

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தில் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை போல இந்த பக்ரீத் பண்டிகையும் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாக விளங்குகின்றது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் பக்ரீத் அன்று பொது விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதேபோல், பல மாநிலங்களும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளன. இதனால் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவையும் திறக்கப்படாது.

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தியில்: ‌‌தியாகத்தையும், பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள்.

இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக – கல்வி – பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Read Mpre: விஜய்யை அநாகரிகமாக விமர்சித்த வேல்முருகன்..!! MLA பதவி பறிபோகிறது..? சபாநாயகருக்கு பறந்த கடிதம்..!!

Vignesh

Next Post

அப்பா - மகன் சண்டையால் அதிருப்தியில் நிர்வாகிகள்..!! தூண்டில் போட்டு இழுக்கும் திமுக..!! பாமகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி..!!

Sat Jun 7 , 2025
கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தவர் R.அசோகன். இவர் தற்போது பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில், R.அசோகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களுக்குச் சால்வை மற்றும் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிருப்தியில் பாமக நிர்வாகிகள் சமீக நாட்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், […]
DMK 2025

You May Like