fbpx

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால், இவ்வளவு நன்மையா…..?

முற்காலத்தில், சமையல் செய்வதும், தண்ணீர் பருகுவதும் என அனைத்து விதமான செயல்களுக்கும் மண்பாண்டங்களை தான் பயன்படுத்தினார்கள் .ஒரு காலத்தில், மண்பாண்டங்களில் நீர் வைத்து குடித்தால், அதன் சுவையே தனியாக தெரியும். மேலும் வெயில் காலத்தில் தற்போதும், இந்த மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், தற்போது நாம் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பருகினால், என்ன விதமான நன்மைகள் உடலுக்கு ஏற்படும்? என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பெரும்பாலும் எல்லோரும் நம்முடைய வெளிப்புற உடலை தூய்மையாக வைத்திருக்க பல்வேறு செயல்களை பின்பற்றுவோம். அதே நேரம் நம்முடைய உடலில் இருக்கின்ற உட்புறத்தை தூய்மைப்படுத்துவதற்காக, பெரிய அளவிலான எந்த செயலையும் நாம் செய்வதில்லை.

அதன் காரணமாகத்தான், பல்வேறு நோய்கள் வந்து, அனைவரும் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இந்த உட்புற உடலை தூய்மையாக வைப்பதற்கு செம்பு பாத்திரத்தில் நீர் பருகுவது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

இந்த செம்பு பாத்திரத்தில் இருக்கும் நீரை, பருகுவதன் மூலமாக, வயிறு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் சரியாகி, உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரகம், கல்லீரல் போன்றவை மிகவும் ஆரோக்கியமாக இருக்க இந்த செம்பு பாத்திர நீர் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நாள்தோறும் காலை வேளையில், செம்பு பாத்திரத்தில், வைக்கப்பட்டிருக்கும் நீரை பருகுவது உடல் நலத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், இந்த செம்பு, உடலில் அமிலத்தன்மை, இருமல், சளி, இதய எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று, ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதயத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதில், இந்த செம்பு மிகவும் முக்கியமான ஒன்று என சொல்லப்படுகிறது.

அதேபோல நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவ்வப்போது உடல்நல கோளாறு ஏற்படும். அதுவும், சிறுவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவர்களை எந்த நோயும், மிக விரைவில் தாக்கக்கூடிய அபாயம் காணப்படும். மேலும், அவர்கள் அந்த நோயிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, ஆகவே இந்த செம்பு பாத்திரத்தில், நீரை வைத்து பருகுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

மேலும் இந்த செம்பு பாத்திரத்தில், நீர் வைத்து பருகினால், அது, எலும்புகளை வலுவாக்கும் என்று சொல்லப்படுகிறது.

Next Post

இல்லம் தோறும் தேசியக் கொடி...! ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாடு முழுவதும்...! மத்திய அரசு அதிரடி...!

Fri Aug 11 , 2023
விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்தின் ஒரு பகுதியாக “இல்லம் தோறும் தேசியக் கொடி” 2023, இயக்கம் ஆகஸ்ட் 13 முதல் 2023 ஆகஸ்ட் 15 வரை நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதில் மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம் பெருமளவில் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]

You May Like