சாலை பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்…! சென்னை மாநகராட்சி உத்தரவு…!

corporation 2025

சென்னையில் ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


சென்னை மாநகராட்சியால் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகள் மற்றும் 5,653.44 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 266 கி.மீ. நீளத்துக்கு 375 பேருந்து சாலைகள், 2,170 கி.மீ. நீளத்துக்கு 13,909 உட்புறச் சாலைகள் உள்ளன. அதன் தொடா்ச்சியாக, இந்த நிதியாண்டில் அனைத்து மண்டலங்களிலும் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியில் 203.18 கி.மீ நீளத்துக்கு 1195 சாலைகளும், நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63.22 கோடியில் 119.80 கி.மீ நீளத்துக்கு 857 உட்புற சாலைகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், சிறப்புத் திட்ட நிதியின் கீழ் ரூ.180 கோடியில் 238.52 கி.மீ. நீளத்துக்கு 1,590 உட்புற சாலைகள் என மொத்தம் ரூ.489.22 கோடியில் 650.90 கி.மீ. நீளத்துக்கு 3,987 சாலைகள் அமைக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.இப்பணிகள் அனைத்தும் பொறியாளா்களின் மேற்பாா்வையில், ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாலைகளை மில்லிங் செய்த 5 நாட்களுக்குள் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் எனவும் சாலை அமைக்கும் பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

ரூ.2000க்கு இப்படியா?. லைவ் வீடியோவில் கணவன் - மனைவி செக்ஸ்!. அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

Sun Jun 29 , 2025
டிஜிட்டல் தளங்கள் மூலம் குற்றச் செயல்கள் எவ்வளவு அமைதியாகப் பரவுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ரூ.2000-க்காக தம்பதி, ஒரு தம்பதி தங்கள் தனிப்பட்ட உடலுறவுத் தருணங்களை லைவ் வீடியோவில் ஒளிபரப்பினர். இந்த சம்பவம் அனைத்தும் அவர்கள் வீடிலிருந்தே நடைபெற்று வந்தது. இன்றைய காலக்கட்டத்தில், சாதாரணமாகத் தெரியும் பலரும் – வேகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டிய ஆசையில், ஆபத்தான வழிகளில் பயணிக்கத் தொடங்குகிறார்கள். இந்த வழிகள் ஒருமுறை […]
husband wife sex live video 11zon

You May Like