தன்னுடைய கள்ளக்காதலுக்கும், உல்லாச வாழ்வுக்கும் இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனோடு சேர்ந்து, தீர்த்துக் கட்டிய மனைவி காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அதாவது, உத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை உரிமையாளரான மெஹ்ராஜுதின்(45). இவருடைய மனைவி ஷாமா. ஷாமாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அகீப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம், நாளடைவில் இருவருக்கும் இடையே, கள்ளக்காதலாக மலர்ந்தது. ஆகவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தான், இந்த விவகாரம் பற்றி அறிந்து கொண்ட ஷாமாவின் கணவர், மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக, தன்னுடைய உல்லாச வாழ்வுக்கும், கள்ளக்காதலுக்கும் கணவர் இடையூறாக இருந்ததால், அவரை தீர்த்து கட்ட, ஷாமா முடிவு செய்தார்.
ஆகவே, நேற்று முன்தினம் ஷாமா அவருடைய கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, தன்னுடைய கள்ளக்காதலனோடு சேர்ந்து, அவரை துப்பாக்கியால் சுட்டு, படுகொலை செய்திருக்கிறார். அதன் பிறகு, இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருக்கின்ற கள்ளக்காதலர்கள் ஷாமா, அகீப் உள்ளிட்ட இருவரையும் தீவிரமாக, தேடி வருகிறார்கள்.