நடப்பு காரிப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
தோட்டக்கலை பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும். நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025 காரிப் பருவத்தில் வெண்டை, வெங்காயம் தக்காளி ஆகிய பயிர்களுக்கு 1.9.2025 வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
(பிரிமீயம் தொகை 1 ஏக்கருக்கு வெண்டை ரூ.1305, வெங்காயம் ரூ.2112.51., தக்காளி ரூ.1862.51 ), வாழை, மரவள்ளி மற்றும் மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு 16 செப்டம்பர் 2025 வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். (பிரிமீயம் தொகை 1 ஏக்கருக்கு வாழை ரூ.1917.51/-மரவள்ளி ரூ.1325.74/- மஞ்சள் ரூ.4157.51/-) ஆகும். KSHEMAGIC கம்பெனி ஆப் இந்தியா என்ற முகமையின் மூலம் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.
விவசாயிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை பட்டா. ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து, இடர்பாடு ஏற்படும் காலத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெறலாம். விதைப்பிற்கு முன்னரே பயிர் காப்பீடு செய்ய கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து விதைப்புச்சான்று பெற்றும் காப்பீடு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டும், தங்கள் கைபேசியில் உழவன் செயலியில் இருந்தும் பயிர் காப்பீடு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Read more: செக்…! மனை பிரிவுகளில் உள்ள இந்த இடங்களை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது…!