11ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிளஸ்1 மாணவி ஒருவர், நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவிக்கு பழக்கமான இரண்டு பேர் அவரை வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் கூறியுள்ளனர். இதனை நம்பி, அந்த மாணவியும் அவர்களுடன் இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார்.
பின்னர், அந்த மாணவியை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அந்த இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து மாணவியை மிரட்டி, ஆடைகளை அவிழ்த்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அந்த 2 பேரின் நண்பர்கள் வந்தனர். அப்போது, மாணவியை கட்டாயப்படுத்தி 5 பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் மாணவி வலியால் துடித்துள்ளார். பின்னர், அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வேறொரு இடத்தில் இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கூட்டு பலாத்காரம் செய்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ வழக்குப் பாய்ந்துள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவி மீரட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏ.எஸ்.பி. சாகர் ஜெயின் தெரிவித்துள்ளார்.