திமுக அரசாங்கம் திவால் ஆகிவிட்டது.. விவசாயிகளுக்கு கடன் இல்லை..‌! எடப்பாடி குற்றச்சாட்டு…!

ADMK Chief secretary Edappadi Palanisamy 2 1

திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி; தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்களை சிரமப்படுத்துகின்றனர். திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது. இதுகுறித்து தஞ்சாவூருக்கு வந்திருந்த பிரதமரிடம் பேசினேன். இப்போது கடன் பெறுவதற்கு ஆவணங்கள் தேவையில்லை என்று கூறுகிறார்கள்..

நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் இருப்பதால் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். அதிமுக ஆட்சியில் சிறு வணிகர்களுக்கு பாதுகாப்பு அளித்தோம். அதிமுக ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக இருந்தது. அனைத்து துறைகளும் எனது கண்காணிப்பில் இருந்தன. இப்போது இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது.

அதிமுக ஆட்சியின்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏராளமான நீர் நிலைகளை தூர்வாரினோம். இதற்காக ரூ.1,240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கால்வாய்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டன. ஆறுகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் ரூ.2 ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்டுவதாக அறிவித்தனர். ஆனால், ஒருசில இடங்களில் மட்டுமே அமைத்துவிட்டு திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். இந்தியாவிலேயே விவசாயிகளின் பயிர்க்கடன்களை ஐந்தாண்டில் இருமுறை தள்ளுபடி செய்தோம். வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு ரூ.2,448 கோடி வழங்கினோம் என்றார்.

Vignesh

Next Post

பட்டப்பகலில் பயங்கரம்!. பர்தா அணிந்த பெண்ணின் மார்பகங்களை பிடித்து இளைஞரின் வெறிச்செயல்!. பகீர் வீடியோ!.

Tue Aug 5 , 2025
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு தெருவில் பர்தா அணிந்து தனியாக நடந்து சென்ற பெண்ணை ஒருவர் மார்பகங்களை பிடித்து துன்புறுத்திய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, உத்தரப்பிரதேச மாநிலம் நாக்பனி பகுதியில் பர்தா அணிந்து சென்ற ஒரு பெண்ணை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் பாலியல் முறையில் தொந்தரவு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், அந்த பெண் தனியாக சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த […]
Moradabad women cctv 11zon

You May Like