காதலியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்ற காதலனை மொத்த குடும்பமும் சேர்ந்து, வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்மாத் அலி என்ற இளைஞர் ஒரு 19 வயது இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான், ஒரு நாள் தன்னுடைய காதலிக்கு பிறந்தநாள் என்று தெரிந்து, அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இரவு வேளையில் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாததால், தன்னுடைய காதலனை அவர் வீட்டுக்குள் அழைத்துள்ளார்.
ஆனால், திடீரென்று அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து விட்டதால், பதறிப் போன அந்த இளம் பெண், உடனடியாக தன்னுடைய காதலனை வீட்டிற்குள் மறைய வைத்திருக்கிறார். ஆனால், திடீரென்று குடும்பத்தினர், அந்த இளம் பெண்ணின் காதலனை பார்த்து விட்டதால். அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பிறகு இளம்பெண்ணின் குடும்பத்தினர், ஒன்றாக இணைந்து, அந்த இளம் பெண்ணின் காதலனை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதன் காரணமாக, கை, கால் போன்ற பல்வேறு இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அடி தாங்க முடியாத அந்த இளைஞர், அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரிடம் உண்மையை சொல்லி கதறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்து போன அந்த இளம் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து, காவல்துறையினரிடம் அந்த இளைஞரை ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையில், அந்த இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவரை காவல்துறையினர் தரப்பில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவருடைய உடல் நிலையில் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், அவரிடம் காவல்துறையினர் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு, இது குறித்து அந்த இளைஞரின் தரப்பில் புகார் வழங்கப்பட்டால், நிச்சயம் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.