Alert: இன்று உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…! அடுத்த 5 நாட்களுக்கு கனமழை…!

Cyclone 2025 1

தமிழகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா பகுதிகளை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திமுக-வில் இணைய போகும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி...! உண்மை என்ன..?

Thu Aug 14 , 2025
முன்னாள் அமைச்சராக இருந்தவர் தங்கமணி. 2021 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தங்கமணி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழும் தங்கமணி, அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி, “நான் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவும், திமுகவில் இருந்து எனக்கு […]
admk thangamani 2025

You May Like