9 வகுப்பு மாணவியை தாயின் கள்ளக்காதலனான தலைமை காவலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி சசிகுமார் (45). இவர் பாளையங்கோட்டை ஆயுதப் படையில் தலைமை காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சசிகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணை பார்க்க அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறிய போது அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.
அதனால் மனம் உடைந்த சிறுமி தனது பள்ளியில் படிக்கும் சக மாணவிகளிடம் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். அப்போது சக மாணவிகள் “ஒன் ஸ்டாப்” என்ற பெண் பாதுகாப்பு அமைப்பிற்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை பற்றி கூற அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி அந்த மாணவியும் தெரிவித்ததை அடுத்து குழந்தைகள் நலன் சார்ந்த அதிகாரிகள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் பெயரில் சிறுமியிடம் புகாரைப் பெற்ற காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் அதிகாரி சசிகுமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: வெஸ்டர்ன் டாய்லெட் Flush-ல் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன் தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..