திருப்பூரை பொறுத்தவரையில், தமிழகத்தின் தொழில் நகரமாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருப்பூருக்கு வந்து, பலர் வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோல வடமாநிலத்தவர்களும் இங்கு வந்து வேலை பார்த்து வருகிறார்கள். தமிழகத்தில் வேலை இல்லாமல் சுற்றித்திரிந்த பல்வேறு இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் முகவரியாய் மாறிப்போனது இந்த திருப்பூர்.
இந்த நிலையில் தான், திருப்பூரில் வந்து தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்த வினைகுமார், விகாஸ்குமார் என்ற இரண்டு வட மாநில இளைஞர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு 40 வயது பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் காவல் துறைகளுக்கு தெரிய வந்துள்ளது. அதாவது, வினைகுமாரும், சீத்தல் ரகசி என்ற அந்த உயிரிழந்த பெண்ணும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. அதாவது சீத்தல் ரகசிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவருடைய கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், இணை குமாருடன் அவர் வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வினைகுமாரின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனை அறிந்து கொண்ட சீத்தல் ரகசி, இவ்வளவு நாட்களாக என்னுடன் பழகிவிட்டு, ஒன்றாக இருந்துவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம்? நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வினைக்குமாரை கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த வினைகுமார், சீத்தல் ரகசியை தன்னுடைய நண்பனையும் சேர்த்துக்கொண்டு, கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு மயான பகுதிக்கு சீத்தல் ரகசி உடலை கொண்டு சென்று ,போட்டு விட்டு வந்து விட்டனர். அதன் பின்னர் இந்த பெண்ணின் உடல் அனாதையாக கிடந்தது காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி வேறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, இது பற்றி கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணை கொலை செய்தது, வினைகுமாரும், விகாஸ்குமாரும் தான் என்பது காவல்துறையினருக்கு தெரிந்தது. இதனை தொடர்ந்து, இருவரையும் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.