செப்டம்பர் மாதம் பாதி நாட்கள் வங்கிகள் இயங்காது.. வெளியான பட்டியல்.. நோட் பண்ணிக்கோங்க மக்களே!

September Bank Holidays 2025 1024x576 1

இன்று ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் பிறந்திருக்கிறது. செப்டம்பர் மாத வங்கிக் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, செப்டம்பர் மாதத்தில் சில நாட்களில் வங்கிகள் மூடப்படும். இந்த நாட்களில் நேரடி வங்கி சேவை கிடையாது, ஆனால் ஆன்லைன் சேவைகள் வழக்கமானபோல செயல்படும்.


வங்கி விடுமுறைப் பட்டியல்:

* செப்டம்பர் 3 புதன்கிழமை : கர்மா பூஜை – ஜார்கண்ட்

* செப்டம்பர் 4 வியாழக்கிழமை : ஓணம் பண்டிகை – கேரளா

* செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை : ஈத்-இ-மிலாத் / மிலாத்-உன்-நபி – குஜராத், மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகண்ட், ஆந்திர பிரதேசம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், கேரளா, டெல்லி, ஜார்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுமுறை.

* செப்டம்பர் 6 சனிக்கிழமை: ஈத்-இ-மிலாத் / இந்திரஜாத்ரா – சிக்கிம், சத்தீஸ்கர்

* செப்டம்பர் 12 வெள்ளிக்கிழமை : மிலாதுல் நபி பண்டிகையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை – ஜம்மு காஷ்மீர்

* செப்டம்பர் 22 திங்கட்கிழமை : நவராத்திரி ஸ்தாபனா – ராஜஸ்தான்

* செப்டம்பர் 23 செவ்வாய்கிழமை : மகாராஜா ஹரி சிங் ஜியின் பிறந்தநாள் – ஜம்மு காஷ்மீர்

* செப்டம்பர் 29 திங்கட்கிழமை : மகா சப்தமி / துர்கா பூஜை – திரிபுரா, அசாம், மேற்கு வங்காளம்

* செப்டம்பர் 30 செவ்வாய்கிழமை : மகா அஷ்டமி / துர்கா பூஜை – திரிபுரா, ஒடிசா, அசாம், மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட்

வார இறுதி விடுமுறை நாட்கள்:

* செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

* செப்டம்பர் 13 சனிக்கிழமை – இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை – அனைத்து வங்கிகளும் மூடப்படும்

* செப்டம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளும் மூடப்படும்

* செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

* செப்டம்பர் 27 சனிக்கிழமை – நான்காவது சனிக்கிழமை விடுமுறை – அனைத்து வங்கிகளும் மூடப்படும்

* செப்டம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளும் மூடப்படும்

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப இந்த விடுமுறை நாட்கள் மாறுபடும். உங்கள் மாநிலத்தில் வங்கிகள் எந்த நாட்களில் மூடப்படுவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, வங்கி சேவைகளை அதன்படி திட்டமிடுங்கள். அரசு விடுமுறை நாட்களில் வங்கிகள் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும்.

Read more: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்.. விண்ணப்பிப்பது எப்படி..? – முழு விவரம் உள்ளே..

English Summary

Banks will be closed for half the days in September.. List released.. People, take note!

Next Post

அமலுக்கு வந்தது டீ, காஃபி விலை உயர்வு..!! புதிய விலை எவ்வளவு தெரியுமா..? சாமானிய மக்கள் அதிர்ச்சி..!!

Mon Sep 1 , 2025
நமது வாழ்க்கை முறையில் டீ மற்றும் காபி என்பது வெறும் பானங்கள் மட்டுமல்ல. அவை ஒரு உணர்வின் வெளிப்பாடாக உள்ளது. காலையில் எழுந்தவுடனும் அல்லது மாலையிலும் ஒரு கப் டீ அல்லது காபி இல்லாமல் அந்த நாளே முடிவடையாது. ஆனால், இப்போது இந்த பழக்கத்திற்கு விலை உயர்வு ஒரு தடையாக வந்துள்ளது. சென்னையில் டீ கடைகளின் வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டீ மற்றும் காபி விலை 3 ஆண்டுகளுக்கு […]
Tea Shop 2025

You May Like