தேனி மாவட்டம் போடி அருகே உள்ள முந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாசு காளை. இவருக்கு பிரவீனா என்ற மனைவி உள்ள நிலையில், இவர் போடி தேனி நெடுஞ்சாலை பங்காரு சாமி கண்மாய் நுழைவுப் பகுதியில் உயிரிழந்து கிடந்தார். அவ்வழியாக செல்பவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
கைபேசி அழைப்பு மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பிரவீனாவின் தந்தையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. உயிரிழந்த பிரவீனாவுக்கு முதலில் தாய் மாமனுடன் திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், பத்து வருடங்களுக்கு முன்பு கோடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாசு காளை என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தன் இரண்டாவது கணவனுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரவீனா தன்னுடைய தந்தை வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார். பிரவீனாவின் தந்தை வீட்டுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசுவதற்காக பிரவீனாவை போடி பங்காருசாமி கண்மாய் அருகே தந்தை வரவழைத்துள்ளார். அங்கு வந்த மகளை மீண்டும் கணவர் வீட்டுக்கே சென்று விடு என்று தந்தை கூறியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தந்தை பூச்சி மருந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்தார். பூச்சி மருந்து அருந்திய பிரவீனா சாகவில்லை என்று தெரிந்ததும் மீண்டும் அவருடைய கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: பாட்டிலுக்கு ரூ.10 வீதம் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி டாஸ்மாக்கில் ஊழல்….! இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு…!