Holiday: 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை…!

Holiday 2025

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. சில வகுப்புகளுக்கான தேர்வுகள் நேற்றே முடிந்துவிட்டன. இதையடுத்து, மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இன்று முதல் அக்டோபர் 5-ம்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையில்தான் ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக். 6-ம் தேதி திறக்கப்பட உள்ளன. காலாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியபோது, ‘‘காலாண்டு விடுமுறை நாட்களில் சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த முடிவை கைவிட்டு காலாண்டு தேர்வு விடுமுறையை முழுமையாக எடுத்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை வழிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

தீபாவளிக்கு ரேஷனில் இலவசமாக மளிகை பொருள், சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும்...!

Sat Sep 27 , 2025
ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு இலவசமாக மளிகை, சர்க்கரை, எண்ணெய் வழங்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது. புதுச்சேரியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் கடந்த தீபாவளிக்கு முன்பாக திறக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரை இலவசமாக தரும் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரேஷனில் அரிசி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷனில் அரிசி தரப்படவில்லை. அரிசிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் ரேஷனில் விடுபட்ட […]
Ration 2025

You May Like