சேலம் மாவட்டம் மோட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்(36). இவரது மனைவி மாராயி. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சிவக்குமார் கடந்த 28ஆம் தேதி சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.. இதனிடையே சிவகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடையங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிவக்குமார் மனைவியிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின்னாக பதில்களை கூறியதால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. தகவலின்படி, சிவக்குமார் மனைவிக்கு ஏற்காடு மருதயாங்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்ற இளைஞனுடன் கடந்த இரண்டரை வருடமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது சிவக்குமாருக்கு தெரிய வந்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது.
சிவக்குமார் வீட்டில் இல்லாத நேரம் சந்தோஷை வீட்டிற்கு வரவலைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த சிவக்குமார் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். இருவரையும் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து ஊர் பெரியவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தனது பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்த சிவக்குமார் மனைவியை மன்னித்து அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
ஊரார் முன்னிலையில் அவமானப்படுத்தியதால், மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த சிவக்குமாரை சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொலையில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.