நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மாநில நிர்வாகி…!

admk 2025

நாம் தமிழர் கட்சியின் மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், அக்கட்சியில் இருந்து விலகி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.


மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, 150-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

விறுவிறுப்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியைப் பலப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். சமிபத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணைந்தனர். மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், அக்கட்சியில் இருந்து விலகி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நெருங்குவதால், மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் சேர்க்க நிர்வாகிகளுக்கு, எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை கொடுத்துள்ளார்.

Vignesh

Next Post

கடன் பிரச்சனை, தொடர் தோல்விகள்..!! வாழ்க்கையை மாற்றும் வாராகி அம்மன் வழிபாடு..!! இந்த நாளை மறந்துறாதீங்க..!!

Tue Oct 21 , 2025
சப்த கன்னிகளுள் ஒருவராகத் திகழும் வாராகி அம்மன், உருவத்தில் மாறுபட்டிருந்தாலும் தாய்மை நிறைந்த உள்ளம் கொண்ட தெய்வம். துயரத்தோடு தன்னை நாடி வருபவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு அருள்புரியும் அற்புதமான சக்தி கொண்டவள் இந்த அன்னை. வாராகி அம்மனை நினைத்து பஞ்சமி திதியில் நாம் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான வழிபாடு, நம்முடைய துயரங்கள் அனைத்தையும் நீக்கிவிடும் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன. கடன், நிம்மதியின்மை, தொடர் தோல்விகள் எனப் பிரச்சனைகள் […]
Varahi Amman 2025

You May Like