“ஜெயிலர் 2″| ரஜினிக்கு ரூ.180 கோடி சம்பளம்!. மோகன்லால் முதல் விஜய் சேதுபதி வரை… மிரள வைக்கும் சம்பள விவரம்!

WhatsApp Image 2026 10 15 at 12.24.36 PM

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்த முக்கிய தகவல்களும், இப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் சம்பள விவரங்களும் வெளியாகியுள்ளன.


2023-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட், நடிகர்களின் சம்பளம் உட்பட ரூ.240 கோடி முதல் ரூ.300 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடித்துள்ள முன்னணி நட்சத்திரங்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.110 கோடி சம்பளம் பெற்று இப்படத்தில் அதிக ஊதியம் பெறும் நடிகராக முதலிடத்தில் உள்ளார். இது தவிர, படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்து லாபத்தில் பங்கு பெரும் ஒப்பந்தமும் அவரிடம் உள்ளதாகவும், இதன் மூலம் அவரது மொத்த வருமானம் ரூ.180 கோடி வரை உயரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து இந்தத் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ‘மேத்யூ’ என்ற கேங்ஸ்டர் பாத்திரத்தில் மீண்டும் நடிப்பதற்காக ரூ.30 கோடி பெற்றுள்ளார். மற்றொரு முக்கிய நடிகரான விஜய் சேதுபதி ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தில் எதிர்மறை சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் வித்யா பாலன் ரூ.6 கோடியும், எஸ்.ஜே. சூர்யா ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலும் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதே சமயம், ஹிருத்திக் ரோஷன் இந்தப் படத்திற்காக எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பொதுவாக ஒரு படத்திற்கு ₹80 கோடி முதல் ₹110 கோடி வரை ஊதியம் பெறும் அவர், இந்தப் படத்திற்காக ரூ.25 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது முதல் நேரடி தமிழ் படமான இதில் வெறும் 2 சீன்களில் மட்டுமே காட்சி தருகிறார். அதற்கு இவ்வளவு பெரிய சம்பளமா என நெட்டிசன்கள் வியக்கின்றனர்.

அனிருத்தின் இசையில், அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த விருந்தாக அக்டோபர் 15 நேற்று திரையரங்குகளில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் முதல் நாளில் ரூ.125 கோடியும், இந்தியாவில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

புள்ளிவிவரங்களில் மட்டும் குறைந்த வறுமை... இந்தியாவில் 23 கோடி பேருக்கு அடிப்படை வசதிகளே இல்லாத அவலம்!. ஐநா, உலக வங்கி வெளியிட்ட நிலவரம்!

Fri Oct 16 , 2026
இந்தியாவில் வறுமை குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும், மக்களின் வாழ்வாதாரச் சிரமங்கள் ஏன் இன்னும் குறையவில்லை என்பது குறித்து ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் விவரிக்கின்றன. வறுமைக் கோட்டைத் தாண்டுவதும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்வதும் ஒன்றல்ல என்பதை இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இருப்பினும், நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுவதும், வறுமைக்கோட்டிற்கு அருகில் உள்ள நடுத்தர […]
poverty india 30kb

You May Like