ஆன்லைன் மூலம் படிப்பு.. பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மகிழ்ச்சி செய்தி…!

College students 2025

பொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி படிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.


இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் (ஏ.சி.டெக்) செயல்படும் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி தொடர்பான குறுகிய கால படிப்பு நவம்பர் 26 முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆன்லைனில் நடத்தப்படும் இந்த படிப்பில், இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் சேரலாம். இந்த படிப்பில் நானோ டெக்னாலஜி தொடர்பான அடிப்படை விஷயங்கள், அண்மைக்கால தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள் போன்றவை குறித்து சொல்லித் தரப்படும். இதற்கு பதிவு செய்ய கடைசி நாள் வரும் 18-ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை பெற 8098953365 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தூள்..! குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிரத்யேக மொபைல் சேவை திட்டம்...! டிச.13 வரை சலுகை...

Sat Nov 15 , 2025
குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் பெரிய அளவிலான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களுக்கான மொபைல் சேவை திட்டம் டிசம்பர் 13-ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 251 ரூபாயில் அதி விரைவான 100 ஜிபி தரவுகளையும் வரையறையற்ற […]
bsnl annual plans 1721558842 1

You May Like