வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்..‌! 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார்….!

Tn Govt 2025

பருவமழையால் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நேற்று சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நீர்த்தேக்கங்களில் உபரிநீர் இருப்பினை முன்கூட்டியே திறத்தல் மற்றும் முறையான நீர் மேலாண்மையின் மூலம் நகரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்படாமல் பாதுகாக்குமாறும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் தேவைக்கேற்ப பொது மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்குமாறும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அலுவலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பேரிடரை எதிர்கொள்ள அனைத்து உபகரணங்களுடனும் தயார் நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி நெல்லையிலும், ஒரு அணி விழுப்புரம் மாவட்டத்திலும், ஒரு அணி சென்னையிலும் முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 5 அணி அரக்கோணத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Vignesh

Next Post

மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்வு...!

Thu Nov 27 , 2025
மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த சம்பளத்துக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும். […]
tn Govt subcidy 2025

You May Like