மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

money School students 2025

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின் பூர்த்தி செய்த படிவங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் டிசம்பர் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று முதல் 15-ம் தேதி வரை சூறாவளிக்காற்று...! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என எச்சரிக்கை...!

Sat Dec 13 , 2025
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும். இன்று காலை திருப்பத்தூர், தருமபுரியில் 17 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும், நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு […]
cyclone rain 2025

You May Like