மெகா இணைப்பு..!! அதிமுகவில் ஐக்கியமான 500 பேர்..!! எடப்பாடியை குஷிப்படுத்திய சி.வி.சண்முகம்..!!

9c8e05bdf9a36ecb2bea5ba6ea636ee1 1

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க இப்போதே தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுமே மாற்றுக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் தீவிரமான போட்டியில் இறங்கியுள்ளன. இந்த முறை எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்ற முனைப்பில் உள்ள அதிமுக, பாஜக உடனான கூட்டணி பலத்துடன் புதிய தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் மாற்றுக் கட்சியினரை அதிமுகவில் இணைக்கும் படலம் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு மாபெரும் இணைப்புக் கூட்டத்தை நடத்தியது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவின் முக்கியப் பிரமுகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் அவர் கட்சியின் அடையாள துண்டை அணிவித்து, உற்சாகமாக வரவேற்றார். தேர்தல் நெருங்கும் வேளையில், அடிமட்ட தொண்டர்களைத் திரட்டுவது தங்களுக்குப் பெரும் சாதகமாக அமையும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

Read More : உடல் எடையை குறைக்கும் மேஜிக் பானம்..!! ஆப்பிள் சீடர் வினிகரை இப்படி பயன்படுத்தி பாருங்க..!! தொப்பையே இருக்காது..!!

CHELLA

Next Post

பெண்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..!! திருமண நிதியுதவித் தொகை ரூ.50,000ஆக உயர்வு..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!!

Mon Dec 29 , 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அதிரடியான பல வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அதிமுக என்பது எளிய மக்களுக்காகவே உருவான பேரியக்கம் என்று புகழாரம் சூட்டிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டு, தற்போது திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் முக்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். குறிப்பாகப் பெண்களைக் […]
Eps

You May Like